அவளுக்கு ,
வானம் பிடிக்கும்,
அது அணைக்கும் பூமி பிடிக்கும்,
தலைகவிழும் நாணல் பிடிக்கும்,
கைநீட்டும் சூரியன் பிடிக்கும்,
சூரியன் கைநீட்ட மொட்டகழும் தாமரை பிடிக்கும்,
புல்வெளி பிடிக்கும்,
அதில் மஞ்சம் கொள்ளும் பனித்துளி பிடிக்கும்,
கடல் பாடும் பாடல் பிடிக்கும்,
கரை தீண்டும் அலைகரங்கள் பிடிக்கும்,
அலைகரம் கீரும் படகு பிடிக்கும்,
எல்லாவற்றையும் விட ,
அவள் அழகு என்று கூறும் கண்ணாடி பிடிக்கும் !!
5 comments:
your poetry is the same...tender and beautiful...just like the girl!
எனக்கு அவளும் பிடிக்கும்,
அவளுக்கு பிடித்த கண்ணாடியும் பிடிக்கும்!
-பாலா :-)
kavithagal nalla irukirathu neraiya tamil books padikka vendukiran.
en blog paarungal ungal karuththai kurungal...thank you
Post a Comment