என்ன அது

தொலையும் வரை தந்த இன்பம் தெரியாது தொலைத்த பின் தரும் துயர் அடங்காது
மறைத்து வைத்தே வளர்த்தது
மறக்கச் சொன்னாள் முடியாது
இருக்கும் போது அது ஆகாயம்
பிரித்தெடுத்தால் அது கடல்
கட்டாயத்தில் வராது
கட்டுப்பாடுகள் இது உணராது
வழி தெரியாமல் விழித்தாலும்
வழி நெஞ்சை துளைத்தாலும்
என்னிடம் இல்லாதது
இன்னொருவரிடம் இருக்கிறது
அது தான் என்னையும் நடத்திச் செல்கிறது

அது தான் உலகையும் சுழற்றிக்கொண்டிருக்கிறது……..