என்னை ஏமாற்றிவிட்டாய் 
என்றுதானே நினைத்திருந்தேன் 
என்னை ஏன் மாற்றிவிட்டாய் !!


உன் மெல்லிசை கேட்கையில்
குத்தாட்டம் போடுமென் மனது!!

உன் முகம் அறிந்தும் அறியாமல்
உன் அகம் புரிந்தும் புரியாமல்
 என் நிலை தெரிந்தும் தெரியாமல்
தன்னிலை மறந்தும் மறவாமல்
காந்தம் ஈர்த்த இரும்பாய்
கள்ளில் விழுந்த வண்டாய்
உன் குரல் கேட்ட பொழுதில்
என் மனம் வீழ்ந்திட்ட நொடியில்
மூழ்குபவனின் மூச்சுக்காற்றாய்
உறைந்தவன் ஏங்கிய அனலாய்
 கிடைத்திட்டாய் நீ எனக்கு!!

குழந்தை கையில் பொம்மை நீ
எடுத்தெரிந்தாலும் நீ வேண்டும்
 அது அணைத்துரங்கிட

விடியாதொரு இரவினில்
காணாதொரு கனவினில்
உன் குரல் ஒலி வழியில்
மதி மயங்கி செல்கின்றேன்
தோழன் தோள் சாயந்து துயில் கொள்ள
மீளாதொரு உறக்கம்....
மு(அ)கம் தெரியாதவனின் தந்தி தகவல்கள்
முழுக்க முழுக்க பொய்கள்
சிலிர்க்க வைத்த சில்மிஷங்கள்
புழுகு மூட்டை ஏனோ கணக்கவில்லை
இதயமற்ற இடத்தில் இதமாய்!!

மகளிர் தின வாழ்த்துக்கள்

பெண்ணே !


கண்ணோடு கண்ணினை நோக்கிடு

நிமிர்ந்த நன்னடை கொண்டிடு

நீ நினைத்ததை முடித்திடு

அன்பு கொண்டு வென்றிடு

புன்னகை என்றும் சிந்திடு

புவியெங்கும் தடத்தினை பதித்திடு

புதுமையான பழமை நீ

புத்துணர்ச்சி வாசம் நீ

வெற்றிகாணும் வியுகம் நீ

வானளக்கும் விண்கலம் நீஉன்னை நீ அறிந்திடு போதும்

தேவைபடாது 35 சதவிகிதம்

படம் பார்த்து கவிதை சொல் !!

என் ஆபரணம் உனக்கு வேண்டுமோ

என் அழகு கண்டு மயக்கமோ

என்னைகண்டு கூச்சலிடும் பெண் புறாவே

எம் கதை கேள் அன்னமே !!நீள் கூந்தல் பின்னி முடிந்து

மனம் கமழும் பூ சூடி

புது பட்டாடை சூழ்ந்து நிற்க

வலைகரங்களும் ஜிமிக்கியும் கதை பேச

வெட்கம் என்னும் மகுடம் சூடி

மௌனம் என்னும் காப்பு அணிந்து

தலைகவிழ்ந்து பின் நிலம் கீறி

அமர்கிறேன் குலம்போற்றும் தமிழ் பெண்ணாக !!மனதில் இருப்பதை நான் கூற

நம்பிக்கைகொண்டு நான் தலை நிமிர

உன்னையும் மிஞ்சி நான் நடை போட

தவறு கண்டு நான் சினம் கொள்ள

என் காலிலே நான் நிற்க

சுதந்திர காற்றை நான் சுவாசிக்க

பிடிக்காததை நான் ஏற்க மறுக்க

மாறிடுவேன் நான் குலம்தூற்றும் திமிர்பிடித்தவளாக !!இனியும் என்னருகில் கூச்சல் வேண்டாம்

அழகும் ஆபரணமும் பெரிது இல்லை

உன் சுதந்திரம் போகும் முன்னே

பறந்து செல் என் மாடப்புறாவே !