கண்ணே வேண்டும் ஒரு எட்டாம் அறிவு !!

உன்னில் தடவியதும் பெற்ற நல்லெண்ணையின் புது வாடை  
உன்னில் பரவியதும் புத்துணர்ச்சி  பெற்றிட்ட புத்தாடை 
 
பூவாணம் தூவுகையில் மலர்ந்திட்ட உன்முகம்
ஒளிர்மலர் கரங்கள் கண்டு தட்டிய  உன் கரம்
 
மத்தாப்பு இதழ்  உதிர்கையில் மலர்ந்திட்ட உன் முகம்
சரவெடி சப்த்தத்தில் என் மார்போடு தழுவிய உன் ஸ்பரிசம்    
 
பம்பரமாய் சுற்றிய சங்குசக்கரம்
கையில் அள்ளிட துடித்திட்ட உன் துணிகரம்
 
 மாசு மண்டலம் நிறைந்து மூச்சுமுட்டிய நேரத்திலும்   
புகைமண்டலம் நடுவே நீ தந்திட்ட சொர்க்கம்
 
கண்ணே உன்னோடு பல தீபாவளி பார்த்திட ஆசை தான்
அதுவரை  பூமி பந்து தாங்கி நிற்குமா இந்த கொடுமையை
 
என்று உணர்வோம் தனக்கே  குளிபரித்துகொள்ளும்  இந்த மடமையை
என்று உணர்வோம்  பூமி தாய்க்கு   செய்ய வேண்டிய நம் கடமையை
 
செய்ய வேண்டும் மனதின் நிசப்தம் வெல்லும் ஒரு சரவெடியை
செய்ய வேண்டும் உள்ளத்தின் இருள் போக்கும் ஒரு மத்தாப்பை
 
செய்ய வேண்டும் அன்பென பொழியும் ஒரு பூவானத்தை 
செய்ய வேண்டும் மடமைகளை அறுத்தெறியும் ஒரு சங்கு சக்கரத்தை 
 
கண்ணே உடனே செய்ய வேண்டும் இந்த ஆயுதத்தை 
தேவை படும் உணர்ந்துகொள் உன் எட்டாம் அறிவை!!