இடை வெளி துளிகள்

சண்டைகளில் தேடிய இடை வெளி
அருகில் தொலைத்த என் சந்தோசங்கள்
தூரத்தில் கிடைக்கும் என்று நினைத்த அமைதி
எல்லாம் கிடைத்தது !
தூரத்தின் அமைதியில் .. தொலைந்து போன நம் அன்பு
கட்டி வைத்து காத்திருக்கிறேன் ,
மறுபடியும் உன்னோடு போர் நடத்த.. !!

இடை வெளியை உம் ரசிக்கிறேன் இன்று
நம்முள் வலியை உணர்த்தியதால்



சண்டைகள் கூட அருகில் இருந்தால் தான் இனிக்கும்
சுகங்கள் கூட தூரத்தில் இருந்தால் கசககும்


நினைவுகள் கூட
இத்தனை சுகம் தரும்
என்று கண்டதில்லை நான்
பிரிவிலும் அருகில் சேர்க்கும்
இந்த நினைவுகளை ச்பரிசுக்கும் வரை !!

ஆசை ஆசை

ஞயாயிற்று கிழமையும் அதுவுமா இந்த முறையானு வீட்ல இருக்கனும் னு நெனச்சோம் . அது க்கு சதி செய்தார் போல என் கணவரின் கைபேசி சிணுங்கியது , "வாழ்த்துக்கள் சார், புத்தக கண்காட்சியில் நீங்கள் போட்ட சீட்டில் உங்களுக்கு குலுக்களில் இரண்டு பரிசு விழுந்திருக்கு ,ஆறு மணிக்கு இந்த விலாசத்துக்கு வந்து வாங்கிட்டு போங்க " னு சொன்னது அந்த குரல். ஆசை யார விட்டுச்சு "இரண்டு பரிசாமே , என்னவா இருக்கும் ? " னு ஒரு குரல் .. " எங்க வீட்ல யாருக்கும் பரிசு விழுந்தது இல்ல , இப்போ தான் இப்படி விழுந்திருக்கு " னு ஒரு குரல் , "எல்லாம் மறுமக வந்த நேரம் " னு ஒரு குரல் . இத எல்லாம் கேட்டு நான் பெருமிதம் வழிய நின்று கொண்டிருந்தேன் . ஷாப்பிங் கூட இதற்காக சீக்கிரம் முடித்து ( பாதியிலேயே ) கொண்டு , அவர்கள் சொன்ன விலாசத்திற்கு கிளம்பினோம் . காரணம் அவர்களிடம் இருந்து வந்த இரண்டு தொலைபேசி அழைப்புதான் . "இத்தனை முறை கூபபிடுகிறார்களே பெரிய்ய பரிசு தான் போலும் " என்ற எண்ணம் எல்லோர் மனதிலும். நாங்கள் வரும் நேரத்தையும் கூட குறிப்பிட்டு கொண்டார்கள்.எல்லாம் ஒரே மாயயாக இருந்தது (அங்கு செல்லும் வரை தாங்க ! போனதும் எல்லாம் விளங்கிடுச்சு ).

சுற்றுலாகளுக்கு எல்லா ஏற்பாடுகளையும் செய்து தரும் நிறுவனம் அது என்று தெரிந்தது . போனதும் ஒருவர் வந்து பயங்கரமாக வரவேற்று , பெயர் எல்லாம் குறித்துக்கொண்டார் , ஆறு மணி முதல் எட்டு மணி வரை உங்களுக்கு எங்கள் ஊழியர் ஒருவர் எங்கள் நிறுவனத்தை பற்றி விவரிப்பார் னு சொன்னார். அடிங்க ரெண்டு மணி நேரம் பேச போறாங்களா னு தெரிஞ்சதுமே கண்ண கட்டிருச்சு , "வந்துடோமே என்ன பண்றது போய தொலையலாம் , கடைசி வரைக்கும் படுத்தாம இவங்க விட மாட்டாங்க "னு தெரிஞ்சு போச்சி , மனச திட படுத்திகிட்டு உள்ள போனோம் .

உள்ள போனதும் , " உங்களுக்கு 25000 மதிப்புள்ள பரிசு கெடைச்சிருக்கு வாழ்த்துக்கள் " னு அவர் சொன்னபோது வாய திறந்தவங்க தான்.. அப்டியே அவர் பேசறத காதுல மட்டும் கேட்க ஆரம்பிச்சோம்.. அவர் " இப்போ எங்க இன்னொரு ஊழியர் உங்ககிட்ட விரிவா பேசுவாங்க " னு சொன்னார் . இன்னொரு பெண்மணி சிரிச்சிகிட்டே வந்தாங்க (என்ன பேஸ்ட் போடறாங்களோ )எங்க குடும்பத்தோட ஆதி முதல் அந்தம் வரை எல்லாம் கேட்டாங்க... எதோ கணவன் மனைவி பேட்டி எடுக்கராப்புல , "இத உங்க மனைவி ட தான் கேட்கணும் அத உங்க கணவர் ட தான் கேட்கணும் " , இப்படி மாத்தி மாத்தி ஜோக் அடிச்சு அவங்க மட்டும் சிரிச்சாங்க, தலை விதி . நான் அப்போவே கடிகாரம் பார்க்க ஆரம்பிச்சுட்டேன் .. இப்படி ஒண்ணு ஒண்ணா கேட்டு கேட்டு எதேதேதோ குறிச்சி கிட்டாங்க , அப்றோம் வந்திச்சு வேட்டு , அவங்க திட்டத்த பத்தியும் , அதன் பலன்களை பத்தியும் சொல்ல ஆரம்பிச்சாங்க ஹா ( ஒண்ணும் இல்ல நாங்க கொட்டாவி விட்ட சத்தம் தான் அது ) . ஆத்தி பயங்கரமான ஆளுங்க டோய் " இந்த குலுக்கல் ல ஜெயிச்சவங்களுக்கு மட்டும் தான் இந்த சலுகை , அதுவும் இன்றைக்கு மட்டும் தான் இந்த சலுகை " னு சொல்லி சும்மா அசால்டா 250000 கட்ட சொல்லிட்டாங்க.. பப்பர பே னு ஆயிடுச்சு எங்களுக்கு ... முடியாது னு சொன்னதுகப்ரமும் விடலே அவங்க.. தவணை திட்டம் அது இது னு சொல்ல ஆரம்சாங்க .. எதுக்கும் மசியல னு தும் 35000 துக்கு ஒரு திட்டம் அதுல யானு சேருங்க வாழ்நாள் முழுதும் உங்களுக்கு ஊர் சுற்றி காட்றோம் னு சொன்னாங்க . ஒரு ரூபா வரைக்கும் திட்டம் வச்சிர்பாங்க போல! எப்படியோ "நாங்க ஊரே சுத்தி பார்க்க மாட்டோம் " னு சொல்லி அங்க இருந்து வர்றதுக்குள்ள .. போதும் போதும் னு அய்டிச்சு. எங்க மன ஆறுதல் வேண்டி ஒரு குக் வேர் கொடுத்தாங்க . அப்றோம் அந்த 25000 மதிப்புள்ள சுற்றுலா தங்கும் வசதி கான கூப்பன் கொடுத்தாங்க , அப்றோம் தான் தெரிஞ்சது இடம் தான் இலவசம் மத்த படி போறது க்கு வர்றது க்கு , சாப்பாடு க்கு எல்லாம் நம்ம ஒரு 50000 செலவு பண்ணனும் னு .

மண்டைல அடிச்சாப்ல அப்போ தாங்க ஏறிச்சு .. இலவசமா வருதுன்னு எதுக்கும் ஆச படக்கூடாது னு . ஆதாயம் இல்லாமல் யாரும் எதையும் செய்ய மாட்டாங்க னு . தொடர்ந்து அப்பா வின் தொலைபேசி அழைப்பு வந்தது , இதெல்லாம் சொன்னதும் " உன்னுடைய உழைப்பு இல்லாமல் , இலவசமாய் வரும் எதற்கும் நீ ஆசை படாதே கண்ணு " னு சொன்னார். எவ்ளோ உண்மையது ங்கறது புரிஞ்சது.

மயிரிழையில் வலையில் இருந்து தப்பினோம் னு வந்தாச்சு , தீமையிலும் நன்மையா ஒரு நல்ல பாடம் படிச்சாச்சு . ஆனாலும் அந்த நிறுவனம் மக்களை கவர் வதற்காக மேற்கொண்ட யுத்திகளுக்கு ஒரு ஜே போட்டே ஆகணும் .உங்களை அதிர்ஷ்ட சாளியாகவும் , இன்று முடிவு எடுக்கா விடில் உங்களுக்கு பெரிய இழப்பு நேரிடும் என்றும் நம்ப வைத்து பணம் பார்க்கும் இப்படி பட்ட திட்டங்கள், உணமையான திட்டங்களோ இல்லை ஏமாற்றும் என்னமோ ஒரு நாளில் முடிவெடுத்து அவ்வளவு பெரிய தொகைக்கு குறி வைக்கும் எந்த நிறுவனத்தையும் நம்ப கூடாதுங்க ,, என்ன சொல்றிங்க ?