எனக்குள் நானே !!எது தனிமை ,

யாரும் அருகில் இல்லாமல் இருப்பதா?

பேச ஆள் இல்லாமல் இருப்பதா ?

என்னை சுற்றி ஆட்கள் நிறைய பேர் இருக்கிறார்களே !

எவ்வளவோ பேசுகிறேனே !!

இருந்தும் ஏன் இந்த வெறுமை இந்த மனதில்!!

பேசும் வார்த்தைகள் எல்லாம் உதட்டில் ஜனனம் கொள்ள

உள்ளத்தில் கருத்தரித்த வார்த்தைகள் ஏனோ இன்னும் பிரச்சவிக்காமல் !!

மனமும் ஒரு கடலாய்

எண்ணங்கள் கொந்தளித்தாலும்

ஆழ் மனதில் ஒரு அமைதி

வெறுமையின் துன்பத்திலும்

எதோ இன்பம் .


யாரும் இல்லாத நேரத்தில்

தேடுகிறேன் நான் என்னை !

பேசுகிறேன் என்னோடு

அறிகிறேன் என் மனதை !!


உன்னோடு நானும்

என் மனதின் பாதி இடத்தில் நீ வீற்றிருந்தாய்
எனக்கான என் மனதின் மீதி இடம் முழுவதும் உனக்கான கனவுகள்
தினமும் ஒரு முறை உன் மின் அஞ்சலில்
உன் பழைய வாழ்த்துக்கள் உயிர் பெற்றன
குறுந்தகவல்களும் , தொலைத்த அழைப்புகளும்
உன்மீதான என் அன்பை காட்ட துடித்துக்கொண்டிருந்தன
தட்டச்சியுடன் போட்டி போட்டுக்கொண்டு என் இதழ்கள் உன்னோடு பேசின
இவை அனைத்தின் மிகையான சத்தத்தினாலோ
என்னவோ என் இதயத்தின் துடிப்பை நீ கேட்கவில்லை
இன்று நான் அமைதி காக்கிறேன்
பொங்கி வரும் உணர்ச்சிகளுக்கு தடை விதிக்கிறேன்
இடைவெளி எல்லாம் தாண்டி உன்
காதுக்கு என் இதய ஓசை எட்டும் என்ற நம்பிக்கை உடன்
என் மனம் முழுவதிலும் நீ வீற்றிருக்கிறாய்

ஹி ஹி ஹி ஹிசுதந்திர தேவி யின் அருகில்

ஜாமீன் இல் வெளியாகிய நான் !!

எங்கேயோ ஒரு குரல்

பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும்
உன் முன் இருப்பது என்னமோ உன் பிம்பம் தான்
சுக்கு நூறாய் நீ உடைத்தாலும்
உடைவது என்னமோ உன் நிழல்கள் தான் !

உனக்குள் நீ எவ்வளவு கத்தினாலும்
உன் இதயம் என்னும் ஒலி கவச அறையை விட்டு
அது வெளியேற போவது இலலை !

கனவில் நீ வடித்து வைத்த பாத்திரங்கள் எதுவும்
உன் நினைவில் வசனங்களை ஒப்புவிக்க போவதும் இல்லை !

உலக நாடக மேடையில் அரங்கேற்ற துடிக்கும் உன் நிஜம் !!