சோகம் என்னை தாக்கும் போது !!


அதிசய பிறவியா நீ என்று அடிக்கடி தோன்றும்

என் மேல் எனக்கே எரிச்சல் உண்டாகும்

இப்படியும் வாழவேண்டுமா என்ற எண்ணம் ஊடூரும்

என் சுபாவங்கள் மாறுபடும்

ஒரு புள்ளியில் இலயிக்காமல் சிந்தனைகள் உடைபடும்

புலம்பக்கூட தோன்றாமல் மனம் உறைந்துக்கிடக்கும்

பிடித்தவர்களை பார்த்துக்கொண்டு மட்டுமே இருக்கத்தோன்றும்

கண்ணீர்த்துளிகள் கூட மறியல் செய்யும்

சின்ன சின்ன நிகழ்வுகளில் இன்பம் தேடும்

இவ்வளவு கோழையா நீ என்று மனசாட்சி கேள்விக்கேட்கும்

விழித்தால் விடியல் என்ற எண்ணத்தில் மட்டுமே கண்மூடும் !!

3 comments:

Anonymous said...

i love the last two lines

Girl of Destiny said...

மனதின் காயம் அழகான எழுத்துக்களில்.....

ஆனால் ஒரு வேண்டுகோள்: எழுத்துப் பிழைகளை திருத்த வேணும் தோழி..

suku said...

Onnume puriala! :((

Post some in a language i can read !