எனக்குள் நானே !!எது தனிமை ,

யாரும் அருகில் இல்லாமல் இருப்பதா?

பேச ஆள் இல்லாமல் இருப்பதா ?

என்னை சுற்றி ஆட்கள் நிறைய பேர் இருக்கிறார்களே !

எவ்வளவோ பேசுகிறேனே !!

இருந்தும் ஏன் இந்த வெறுமை இந்த மனதில்!!

பேசும் வார்த்தைகள் எல்லாம் உதட்டில் ஜனனம் கொள்ள

உள்ளத்தில் கருத்தரித்த வார்த்தைகள் ஏனோ இன்னும் பிரச்சவிக்காமல் !!

மனமும் ஒரு கடலாய்

எண்ணங்கள் கொந்தளித்தாலும்

ஆழ் மனதில் ஒரு அமைதி

வெறுமையின் துன்பத்திலும்

எதோ இன்பம் .


யாரும் இல்லாத நேரத்தில்

தேடுகிறேன் நான் என்னை !

பேசுகிறேன் என்னோடு

அறிகிறேன் என் மனதை !!


10 comments:

JK said...

- //என்னுடைய நண்பர்(பி) போஸ்ட் படித்தோமா ...கம்மண்ட் எழுதோனோமா இருக்கணும்.சும்மா எழுததவங்க எந்த மன நிலையில் எழுதி இருப்பாங்க
என்பதை பற்றி எல்லாம் ஆராய்ச்சி பண்ணக்கூடதுணு சொன்னாங்க(அவங்க சொன்னது சரியே)...
அதனால நான் அந்த பக்கம் போகல...//

வரிகள் அன்னைத்தும் அழுத்தம்....சொல்லிலும் , பொருளிலும்...!!

இது தேனின் மொழி என்பதாலோ.....
கசப்பிலும் இனிக்கிறது!!!

நான் தமிழை சொன்னேன்

ரூபஸ் said...

//பேசும் வார்த்தைகள் எல்லாம் உதட்டில் ஜனனம் கொள்ள உள்ளத்தில் கருத்தரித்த வார்த்தைகள் ஏனோ இன்னும் பிரசவிக்காமலே !! //

வார்த்தைகளில் வழிந்தோடும் எதார்த்தம், மீண்டும், மீண்டும் ரசிக்க வைக்கிறது..

சில நேரங்களில் தனிமை நம்மை நாமே புடமிட்டுப்பார்க்க உதவுகிறது.

கார்த்திக் said...

//இது தேனின் மொழி என்பதாலோ.....
கசப்பிலும் இனிக்கிறது!!!//

jk arumaiyaana comment ponga

tamizh said...

தனிமைப் பழகு என்று விவேகானந்தர் சொல்லி இருக்கிறார்.. பழகிவிட்டால் கூட்டத்தோடு உடல் இருந்தாலும் மனம் மட்டும் தனிமையிலேயே உறையும்..

சில வரிகளில் ஒரு கவிதை, என்று நினைத்து என்னால் வேறு எதுவும் சொல்ல முடியவில்லை 'நன்றாக எழுதியிருக்கிறாய் தேன்!'

Gokulan said...

உண்மைங்க.. தனிமையில் நம்மை உற்றுப்பார்க்கும்போது தாம் நம்மைபற்றி நாம் அறிய முடியும்..

sathish said...

தனிமை வேறு தனித்திருப்பது வேறோ!!

//வெறுமையின் துன்பத்திலும்
எதோ இன்பம்//

துன்பங்கள் மறைந்து இன்பங்கள் நிறையட்டும் :)

நிஜமா நல்லவன் said...

அருகில் எவ்வளவு பேர் இருந்தாலும் மனதின் அருகில் யாரும் இல்லாதவரையில் தனிமைகள் தொடரத்தான் செய்கின்றன. நல்ல கவிதை.

umakumar said...

இதை self introspection ணு சொல்லாலாங்க‌...

Divya said...

உங்களுக்குள்ளே உங்களை தேடும் அந்த தனிமை தேடலை.....மிக அழகாக வெளிப்படுத்தியுள்ளீர்கள்!!

நான் said...

யாரும் இல்லாத நேரத்தில் தேடுகிறேன் நான் என்னை ! பேசுகிறேன் என்னோடு அறிகிறேன் என் மனதை !!

உங்களை சுயவிமர்சனம் செய்துகொள்கிறீர்கள் நன்று