உன்னோடு நானும்

என் மனதின் பாதி இடத்தில் நீ வீற்றிருந்தாய்
எனக்கான என் மனதின் மீதி இடம் முழுவதும் உனக்கான கனவுகள்
தினமும் ஒரு முறை உன் மின் அஞ்சலில்
உன் பழைய வாழ்த்துக்கள் உயிர் பெற்றன
குறுந்தகவல்களும் , தொலைத்த அழைப்புகளும்
உன்மீதான என் அன்பை காட்ட துடித்துக்கொண்டிருந்தன
தட்டச்சியுடன் போட்டி போட்டுக்கொண்டு என் இதழ்கள் உன்னோடு பேசின
இவை அனைத்தின் மிகையான சத்தத்தினாலோ
என்னவோ என் இதயத்தின் துடிப்பை நீ கேட்கவில்லை
இன்று நான் அமைதி காக்கிறேன்
பொங்கி வரும் உணர்ச்சிகளுக்கு தடை விதிக்கிறேன்
இடைவெளி எல்லாம் தாண்டி உன்
காதுக்கு என் இதய ஓசை எட்டும் என்ற நம்பிக்கை உடன்
என் மனம் முழுவதிலும் நீ வீற்றிருக்கிறாய்

10 comments:

JK said...

Ithu yosithu ezhuthiya ..varathaikal alla....
Anubavathin varthaikal...:)

Ungalodaya varikalai patidha pothu Irendu...puthiya thamizh varthaikalai kattru konden..Nandri

Thenmozhi said...

@JK ithu anubavam alla , oru nigalchiyin migaipadiyana karapanai endraal nambuveergala ?

en varigalial irunthu puthu vaarthagail katru kondeera? . mikka magilchi . :-)

JK said...

Nambitten :-))

ரூபஸ் said...

//துடித்துக்கொண்டிருந்தன தட்டச்சியுடன் போட்டி போட்டுக்கொண்டு என் இதழ்கள் உன்னோடு பேசின//

அழகான வரிகள்..

Divya said...

Hi Thenmozhi,

Thanks for visiting my blog,
your comments meant a lot to me,
again thanks Thenmozhi!!

BTW, unga kavithai nalla irukuthunga,

konjam spelling mistake irkuthu, correct paniteenganna.......super aa irukum!!

ரசிகன் said...

//அனைத்தின் மிகைஆன சத்தத்தினாலோ என்னவோ இன் இதயத்தின் துடிப்பை நீ கேடகவில்லை இன்று நான் அமைதி காக்கிறேன் பொங்கி வரும் உணர்ச்சிகளுக்கு தடை விதிக்கிறேன் இடைவெளி எல்லாம் தாண்டி உன் காதுக்கு என் இதய ஓசை எட்டும் என்ற நம்பிக்கை உடன்//

அடடா... கலக்கலா இருக்கு:)

ஆமாம் ஏனுங்க கவிதையில இவ்ளோ ஸ்பெல்லிங் மிஸ்டேக்கு? என்னிய விட அதிகமா இருக்கும் போலயிருக்கே:P

Divya said...

மிகைஆன-> மிகையான

இன் இதயத்தின் -> என் இதயத்தின்

முழிவதிலும் நீ-> முழுவதிலும்


என் கண்களுக்கு தென்பட்ட எழுத்துப்பிழைகளை சுட்டிக்காட்டியுள்ளேன் தேன்மொழி!!

Divya said...

\\ ரசிகன் said...
//

அடடா... கலக்கலா இருக்கு:)

ஆமாம் ஏனுங்க கவிதையில இவ்ளோ ஸ்பெல்லிங் மிஸ்டேக்கு? என்னிய விட அதிகமா இருக்கும் போலயிருக்கே:P\


ஹா ஹா!!ரசிகன்!!
உங்களுக்கு போட்டியா ஒருத்தராவது இருக்க வேணாமா???

Thenmozhi said...

நன்றி திவ்யா . பிழைகள் திருத்தப்பட்டுவிட்டது
உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி ரசிகன் மற்றும் ரூபஸ் அவர்களே

Sudha said...

Very nice one.. I wish evn i cld write like U ;-)


I liked thse lines a lot..

தட்டச்சியுடன் போட்டி போட்டுக்கொண்டு என் இதழ்கள் உன்னோடு பேசின

Wonderful way of putting, wat we do all times :-)

Keep it up!