எது தனிமை ,
யாரும் அருகில் இல்லாமல் இருப்பதா?
பேச ஆள் இல்லாமல் இருப்பதா ?
என்னை சுற்றி ஆட்கள் நிறைய பேர் இருக்கிறார்களே !
எவ்வளவோ பேசுகிறேனே !!
இருந்தும் ஏன் இந்த வெறுமை இந்த மனதில்!!
பேசும் வார்த்தைகள் எல்லாம் உதட்டில் ஜனனம் கொள்ள
உள்ளத்தில் கருத்தரித்த வார்த்தைகள் ஏனோ இன்னும் பிரச்சவிக்காமல் !!
மனமும் ஒரு கடலாய்
எண்ணங்கள் கொந்தளித்தாலும்
ஆழ் மனதில் ஒரு அமைதி
வெறுமையின் துன்பத்திலும்
எதோ இன்பம் .
யாரும் இல்லாத நேரத்தில்
தேடுகிறேன் நான் என்னை !
பேசுகிறேன் என்னோடு
அறிகிறேன் என் மனதை !!