தொலைத்து விட்டேன் என்னை !




தொட்டதற்க்கெல்லாம் சிரித்தவள் நான்
இன்று சொன்னால் மட்டுமே சிரிக்கின்றேன்
தொலைத்து விட்டேன் என் சிரிப்பை !


நாடகத்தில் நடித்துள்ளேன் நான்
இன்று வாழ்க்கையே நாடகமாக
தொலைத்து விட்டேன் என் நிஜத்தை!

கலாச்சாரத்தை மதிப்பவள் நான்
இன்று கலாச்சாரத்தின் மூடத்தனங்கள் என்னை மிதிக்கையில்
தொலைத்து விட்டேன் என் சுயசிந்தனையை!

பெண்ணுரிமைக்கு குரல் கொடுப்பவள் நான்
இன்று என்னுரிமை பறிபோகையில் மௌனமாய் அழுகின்றேன்
தொலைத்து விட்டேன் என் உணர்ச்சிகளை !

தொலையாமல் இருக்க முடி போட்டு வைத்தவள் நான்
இன்று 'முடி' போட்டதிலே
தொலைத்து விட்டேன் என் சுதந்திரத்தை !

'நாம்' என்று வாழ்வதற்கே
'நான்' தொலைத்து விட்டேன் என்னை !
இன்றும் 'நீ' நீயாக !!

3 comments:

ragav said...

Really good Excellent

Girl of Destiny said...

Pulls at the heart strings.

Goofy said...

Jus another poetical work?
Doesn sound so simple to me!