சொல்ல முடியவில்லை !!




ஏனோ,


நீ சிரிக்க வைத்த நினைவுகள் ,
நிஜத்தில் அழ வைக்கின்றது,

நீ நிஜமாய் அழவைத்ததை
நினைக்கையில் சிரிப்பு வருகின்றது,

அன்று பேசிய பேச்சிற்கு
இன்று மன்னிப்பு கேட்கின்றேன்

அன்று போட்ட சண்டைக்கு
இன்று சமாதானம் சொல்கின்றேன்

கிண்டலும் ,சீண்டலும்
என்று செய்வாயென காத்து நிற்கின்றேன்

தினம் தினம் சொல்ல நினைக்கின்றேன்
சொல்ல முடியவில்லை

டேய் ! அண்ணா !!
Dedicated to my dear Brother , for Raksha bhandan!!






தொலைத்து விட்டேன் என்னை !




தொட்டதற்க்கெல்லாம் சிரித்தவள் நான்
இன்று சொன்னால் மட்டுமே சிரிக்கின்றேன்
தொலைத்து விட்டேன் என் சிரிப்பை !


நாடகத்தில் நடித்துள்ளேன் நான்
இன்று வாழ்க்கையே நாடகமாக
தொலைத்து விட்டேன் என் நிஜத்தை!

கலாச்சாரத்தை மதிப்பவள் நான்
இன்று கலாச்சாரத்தின் மூடத்தனங்கள் என்னை மிதிக்கையில்
தொலைத்து விட்டேன் என் சுயசிந்தனையை!

பெண்ணுரிமைக்கு குரல் கொடுப்பவள் நான்
இன்று என்னுரிமை பறிபோகையில் மௌனமாய் அழுகின்றேன்
தொலைத்து விட்டேன் என் உணர்ச்சிகளை !

தொலையாமல் இருக்க முடி போட்டு வைத்தவள் நான்
இன்று 'முடி' போட்டதிலே
தொலைத்து விட்டேன் என் சுதந்திரத்தை !

'நாம்' என்று வாழ்வதற்கே
'நான்' தொலைத்து விட்டேன் என்னை !
இன்றும் 'நீ' நீயாக !!

Someone Tagged Me

mathi tagged me
for a somewhat silly but a funny game to say some 8 facts about you !

here are my facts!!

1.I am like a Proverb ( "Short and sweet " )
2.I like to spend time with my friends,, i love them a lot :-)
3.I like to be perfect and abide rules.
4.I like to roam with my scooty
5.I ll become a kid when i play with them
6.I am learning a lot now a days (Lessons based on experiences)
7.I ll get upset soon
8.I wanna do skiiing, bungy jumping, para gliding :-))))))