பே(போ)தை மனம்

இந்த நொடியின் ஆனந்தத்தை விட்டுவிட்டு

நேற்றைய வலியிலேயே இன்றும் உழல்கிறது

நாளைய ஆனந்தத்தை தேடி அலைகிறது

சந்தோசத்தின் தேடலிலியே நாட்களை கடத்துகிறதுஎதிலுமே திருப்தி கொள்ள மறுக்கிறது

இல்லாத ஒன்றிற்காகவே ஏங்குகிறது

காலடியில் கிடக்கும் சொர்க்கம் தவிர்த்து

வான் நோக்கி பறந்து கொண்டிருக்கிறதுஉடல் ஓய்ந்தாலும் ஓயாது துடிக்கிறது

உயிரின் கடைசி துளியை பருகியும்

தாகம் தணியாது தவிக்கிறது

தீரா பசிகொண்டு அலைகிறது

No comments: