அடித்த போதும் அணைக்கிறாய்
எனக்கு வலித்தாலும் துடிக்கிறாய்
கர்த்தரின் புது கவிதை நீ !
கொடுத்தாலும் சிரிக்கிறாய்
எடுத்தாலும் சிரிக்கிறாய்
கீதையின் சிறு உருவம் நீ !
எதிலும் சந்தோசம் காண்கிறாய்
அனைவரிடமும் அதை பகிர்கிறாய்
புத்தரின் புத்துயிர் நீ !
குழந்தையும் தெய்வமும் வேறில்லை
இனியும் நான் நாத்திகனில்லை !
கற்றுக்கொடுக்க ஒன்றுமில்லை உனக்கு
உன்னிடம் கற்றுக்கொள்ள ஆயிரமாயிரம் !!