காதல் நடக்குது !!


தொலைவை எல்லாம் நொடியில்

தொலைத்து விட்டு

நீயும் நானும் நடக்க


பேசிய வார்த்தைகளை விட

நம்மிடம் இருந்த

மௌனம் கணக்க


பிரியும் நேரம் வருகையில்

இருவரின் கால்களும்

அன்ன நடை கற்பிக்க


சொல்லாத நம் காதல்

அடி நாக்கின்

கற்கண்டாய் இனிக்க

3 comments:

Bala said...

As usual ennaku onnum puriyala...
Chennai local tamizh la konjam kavidha padinga pls!

விஷ்ணு. said...

// சொல்லாத நம் காதல்

அடி நாக்கின்

கற்கண்டாய் இனிக்க //

எல்லாரும் சொல்லாத காதல் சோகமா தான் உருவகபடுத்துவாங்க ஆனா நீங்க கற்கண்டோடு உருவகபடுத்துறீங்களே..

Nivi said...

hey superb a iruku....