தினமும் நடக்கும் நாடகம் இது,
தினம் வெளியில் கிளம்புகையில்
எதிர்வீட்டிற்கு செல்லும்
என் பார்வை அவனைத்தேடி!
அவனும் நின்றிருப்பான்
பார்வைகள் வீசி
புன்னகை பரிமாற்றம் !
இன்றாவது சொல்லிவிட வேண்டும்
எத்தனை நாள் தான் பொறுப்பது
என்றாவது சொல்லித்தானே ஆகவேண்டும் !
தயங்கிக்கொண்டே அருகில் சென்றேன்
இன்னும் விரிந்தது அவன் இதழ்கள்
காதோரம் மெல்லமாய் சொன்னேன் !
' டேய் குட்டிப்பையா !
இரண்டு வயசாகுது இன்னும் விரல் சூப்புற !
தப்புடா செல்லம் !! '
Showing posts with label i wanna say something. Show all posts
Showing posts with label i wanna say something. Show all posts
Subscribe to:
Posts (Atom)